பரிசுத்தமாக்கும் தேவா

 

 

பரிசுத்தமாக்கும் தேவா

என்னை பரிசுத்தமாக்கிடுமே

 

உம் உருக்கத்தினால் இரங்கி என்னை

உகந்ததாக்கிடுமே

உம் உதிரத்தால் என்னை கழுவி

உமக்குரியவனாக்கிடுமே

 

மன்னித்து மறக்கும் என் தேவனே

பரிசுத்தமாக்கிடுமே

மண்ணான என்னையும்

மறுரூபமாக்கிடுமே - களி             -                பரிசுத்தமாக்கும்

 

 

வசனத்தால் என்னை வழிநடத்தி

பரிசுத்தமாக்கிடுமே

வார்த்தையால் என்னை வனைந்து

பொன்னாக மாற்றிடுமே - உம்                 -                பரிசுத்தமாக்கும்

 

 

பரிசுத்த ஆவியால் நிரப்பி என்னை

பரிசுத்தமாக்கிடுமே

சாட்சியாய் வாழச் செய்து என்னை

மகிமையில் சேர்த்திடுமே   -உம்-                பரிசுத்தமாக்கும்